அன்பின் பரிணாமச் சங்கம்

 மத மாற்றம் அல்ல , மன மாற்றமே எமது நோக்கம் !
        ආගම නොව ආකල්ප වෙනස් කරමු 

 

ன்பின் பரிணாமச் சங்கம் 

             

எமது  இலக்கு    : 

 இறையரசின் பெறுமதிகளை எம்மிடையே வளர்ப்பதன் மூலம் இறைவனை மகிமைப்படுத்துவது கிறிஸ்துவைப்போல அன்பு கூர்வதன்                 

                 மூலம் ஒரு கிறிஸ்துவாக மாறுவது.


    குறிக்கோள் :  

சாதி, இன, பிரதேச, வேறுபாடுகளை மறந்து கிறிஸ்துநாதரை எமது வாழ்வில்  ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்று ஒரே சகோதரர்களாய்              

     வாழ்வது.

திருச்சபையின் படிப்பினைகளுக்கேற்ப விசுவாசத்தைப் பாதுகாப்பது.

போதை பாவிப்பது, புகைபிடிப்பது போன்றவற்றைக் கைவிடுவதோடு அவற்றால் மற்றவர்களை உபசரிக்காமல் இருப்பது.

இருப்பவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்வது.

அவசியமானதை மட்டும் பாவித்து எளிமை வாழ்வு வாழ்வது.

அன்றாடம் செபிப்பது இறைவார்த்தையை வாசித்து அதன்படி விசுவாச வாழ்வு வாழ்வது.

குடும்ப ஆன்மீகத்தைக் கட்டியெழுப்புவதோடு, மற்றவர்களுக்கும் ஆன்மீகத்தை வளர்க்க உதவுவது.

நீதி நேர்மையோடு வாழ்வது.

கூட்டுக்குடும்பமாக மன்னித்து மறந்து ஒற்றுமையாக வாழ்வது;

இந்த அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து மற்றவர்களுக்கு உதவுவது.   

நீங்கள் தேவனுக்கு தேவை 

உடன் எமது இணையத்தில்

அங்கத்தினர் ஆகுங்கள்   

Please Register

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை."
திருப்பாடல்கள் 111 : 7-10 
1 திமொத்தேயு 4 : 12-16
லூக்கா 7 : 36-50


  ஆயரின் ஆசிச்செய்தி


அன்பே தலை சிறந்தது


“ஆக  நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு, அகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலை சிறந்தது.” (1 கொரிந்தியர் 13:13) இம்மேலான வரங்களான நம்பிக்கை எதிர்நோக்கு அன்பு என்பன இறைவனாலேயே எமக்குத் தரப்படுகின்றன. அவற்றில் எவ்வளவு ஆர்வம் கொண்டு இறைவனோடு உறவு கொள்கிறோமோ அவ்வளவுக்கு நாம் தந்தை மகன் தூய ஆவியோடு நெருங்கிய உறவில் வள்ர்கிறோம்.கொழும்பு உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க குருமுதல்வர்
அருட்பணி மனோகுமரன் நாகரட்ணம்.

ஆசியுரை

புதிய சமுதாயமான அன்பின் சமுதாயம் காண்பதே இயேசுவின் இலட்சியம். அதற்காகவே தன்னை முழுவதும் இயேசு அர்ப்பணித்து வாழ்ந்தார். இந்த அன்பு ஆட்சியில் பணிபுரியத்தான் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த அன்புப் பணியை அன்பின் பரிணாமச் சங்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக பல இடர்பாடுகளின் மத்தியில் வெற்றிகரமாக ஆற்றி வருகின்றதை நான் அறிவேன்.

அன்பின் பரிணாமச்சங்க   ஸ்தாபகர்   சகோதரர் 
பேராசிரியர் டாக்டர் திரு . S. J. யோகராசா அவர்களின்  நற்செய்தி 


முப்பது ஆண்டுகள் அன்பின் பரிணாமச் சங்க மக்களை ஆன்மீகப் பயணத்தில் செல்ல இறைவன் என்னையும் எனது மனைவியையும் அழைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். இந்த அழைப்பு மிகவும் கடினமான அழைப்பாகும். ஆரம்பகாலத்தில் பணிவும் கீழ்ப்படிவும் உள்ள மக்களை அழைத்துச் செல்வது இலகுவாகும். நாட்செல்லச் செல்ல மக்கள் வளர வளர கீழ்ப்படிவும் பணிவும் குறைந்து இறைவிருப்பத்தை விட்டுத் தத்தமது விருப்பப்படி வாழ ஆசைவரும். 

PROF DR S.J.YOGARASA WITH ASAIHL INTERNATIONAL CONFERENCE @ TAIWAN ON 20th 21st 22nd MAY 2016

 
 

 'உன்னைப் படைத்தவரைப் போற்று: அவரே தம் நலன்களால் உன்னை நிரப்பியவர்." (சீராக் 32:13)

இன்றைய புனிதர்

இன்றைய புனிதர்
2016-08-27
மோனிக்கா Monika
புனித அகுஸ்தினாரின் தாயார்

பிறப்பு 
332, 
டாகஸ்டே Tagaste, நுமிடியன் Numidien (இன்றைய அல்ஜீரியா)
இறப்பு 
அக்டோபர் 387, 
ஓஸ்டியா Ostia, இத்தாலி
பாதுகாவல்: கிறித்தவ பெண்கள், தாய்மார்கள்

புனித மோனிக்கா சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் (Patricius) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார். 

தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். இவர் கார்த்தேஜ்(Carthej) என்ற நகரிலிருக்கும் புனித சிப்ரியன் ஆலயத்தில் அமர்ந்து செபிக்கும்போது, தன் மகன் அகுஸ்தீன் உரோம் நகர் சென்றார். இதையறிந்த அத்தாய், மகனைக் காண ஓடோடி கப்பலேறி வந்துகொண்டிருக்கும்போது, சுகமில்லாம் இறந்துவிட்டார்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அன்னை மரியின் முத்திபேறுபெற்ற டோமினிக் Dominikus a Matre Dei CP
சபைத்தலைவர்
பிறப்பு: 22 ஜூன் 1792 விதர்போ Palanzano bei Viterbo, இத்தாலி
இறப்பு: 27 ஆகஸ்டு 1849 இங்கிலாந்து
முத்திபேறுபட்டம்: 27 அக்டோபர் 1963, உரோம், திருத்தந்தை ஆறாம் பவுல்

இன்றைய வேதாகம
 வாசகம
மூன்றாவது திருவழிபாடு ஆண்டு 
பொதுக்காலம் 21வது வாரம் சனிக்கிழமை
2016-08-27
0புனித மொனிக்கா


முதல் வாசகம்
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். 
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31


பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 
திருப்பாடல் 33: 12-13. 18-19. 20-21

நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

இன்றைய சிந்தனை
''உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்... இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்'' (மத்தேயு 25:29)
பயன்படுத்தாத செல்வம் பாழாய்ப்போகும் என்னும் உண்மையை இயேசு நமக்குக் கற்பிக்கிறார். வெவ்வேறு அளவில் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் செல்வம் ஈட்டினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாலந்தைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்துவைத்தார். கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடைகள் பல. அவற்றை நாம் நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்ய முன்வரவேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற காலம் குறுகியது, நாம் பெற்றுள்ள கொடைகளும் சில இலட்சியங்களை அடைய வேண்டும் என நம் உள்ளத்தில் எழுகின்ற ஆர்வங்களும் எல்லைகளுக்கு உட்பட்டவை. இவற்றை அறிவோடு பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச் சிலர் தாம் பெற்ற கொடைகளை மனம்போன போக்கில் செலவழித்து வீணடிக்கிறார்கள்; வேறு சிலரோ தம் கொடைகளைப் பத்திரமாகப் பொதிந்துவைத்து யாருக்கும் பயன்படா வண்ணம் அழிந்துபட விட்டுவிடுகிறார்கள். இந்த இரு போக்குகளுமே தவறானவை. எதிர்காலத்தைப் பற்றி யாதொரு கவலையும் இல்லாமல் இருப்பதும் தவறு, எதிர்காலத்தில் என்ன நிகழ்ந்துவிடுமோ என்னும் அச்சத்தால் வாழ்க்கையை வீணடிப்பதும் தவறு. 
வாழ்க்கையில் நம்மைத் தேடி வருகின்ற சவால்களை நாம் துணிவோடு சந்திக்க வேண்டும். நன்மை செய்வதில் ஈடுபாடு வேண்டும். இத்தகைய துணிச்சலான செயல்பாடு இல்லாத இடத்தில் இலட்சியங்கள் படிப்படியாக மடிந்துபோகும். எனவே, இயேசு அறிவிக்கின்ற நற்செய்தியை உள்வாங்கி அதன்படி நடக்க விரும்புவோரிடத்தில் துணிந்து செயல்படுகின்ற மன நிலை வளர வேண்டும். கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடைகளை நன்முறையில் செலவிட்டு உலகம் உய்ந்திட நம்மை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இயேசு நமக்கு விடுக்கின்ற அழைப்பு. 

அன்பின் பரிணாமச் சங்க வரலாறு

Bro. S.J. Yogarasa

    1981ம் ஆண்டிலிருந்து கத்தோலிக்க திருச்சபையில் புபுதுவ என்ற ஆன்மீக கூட்டங்களில் பங்கு பற்றத் தொடங்கி 1982.12.04ம் திகதி கிறிஸ்துவை எனது வாழ்வில் ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்றுக் கொண்டேன். அதன் பின்பு எனது பக்தி முயற்சிகள் மாறி நம்பிக்கை, விசுவாசம், அன்பில் வளரத்தொடங்கினேன். 

 

ன்பின் பரிணாமச் சங்கம்

 
 

LIVE TELECAST WINDOW

LIVE ANBURADIO

           கிட்டத்தட்ட 80 உல மொழிகளில் உங்கள் அன்பின்    பரிணாமச் சங்க இணையம்

   இறைவனுக்கு ஸ்தோத்திரம் 

எமது இணைய பக்கங்கள் 

WELCOM MIXDOWN
-1:51

அன்றில் இருந்து  இன்று வரை 
அன்பின் பரிணாமச் சங்கம் 

எமது இணைய அங்கத்தவராக இணைந்திட

எமது அன்பு வானொலி நிகழ்ச்சிகளை, காலை 5 மணி தொடக்கம் காலை எட்டு மணிவரையும் , மாலை நிகழ்ச்சிகள், மாலை 6 மணி தொடங்கி இரவு 8 மணி வரையும் உறவுகள் கேட்கலாம் .

Winamp, iTunes Windows Media Player Real Player QuickTime
 
 
Map

பேராசிரியரின் நூல்கள் உங்கள் பார்வைக்கு 

     திரையில்                மறை 
Click to edit text
 

AUDIOGRAPHIK SRILANKA
 கலையக ஒளிப்பதிவின் போது ....